Google

பள்ளியில் கடவுள் வாழ்த்தை நிறுத்திய பெண்மணி! காணொளி இணைப்பு

Written on:February 2, 2012
Comments
Add One


பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு
தீயணைப்புப் படை வீரரின் மகளும், ஒரு செவிலியருமான ஜெஸ்ஸிகா அல்கு விஸ்ட் என்ற பெண் ரோமன் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழும் அமெரிக்க நாட்டின் கிரேன்ஸ்டனில் வழக்கு தொடுத்து, 49 ஆண்டு காலமாக பள்ளியில் இருந்து வந்த இறைவணக்கப் பாடல் ஒன்றை நீக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்பான தாகும்.

கிரேன்ஸ்டன் மேற்கு உயர் நிலைப் பள்ளியின் கலையரங்கத்தின் சுவரில் ஒட்டப்பட்டு 1963 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்த இறைவணக்கப் பாடல் பள்ளியில் வைக்கப்பட்டிருப்பது அரச மைப்பு சட்ட விரோதமானது என்று தீர்ப் பளித்த நீதிபதி மத விஷயங்களில் நடு நிலை வகிப்பது என்ற அரசின் கொள் கையை மீறுவதாக அது உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏழாம் வகுப்பு படித்த ஒரு மாணவி இந்த இறை வணக்கப்பாடலை ஒரு ஒழுக்கநெறி வழிகாட்டி போல் எழுதி யிருந்தார். அந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து சென்ற மாணவர்கள் அதனை பள்ளிக்கு ஒரு பரிசாக அளித்தனர். பள்ளிகளில் இறைவணக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்துவதை அமெரிக்க உச்சநீதி மன்றம் தடை செய்து தீர்ப்பு அளித்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.

சிறப்பான செயல்களை ஒவ்வொரு நாளும் நாம் செய்வதற்கும், ஒழுக்க நெறி யிலும், உடல் வலிமையோடு நாம் வளரவும், கருணையுள்ளம் கொண்டு உதவி செய் பவர்களாக நாம் இருக்கவுமான விழைவை சொர்க்கத்தில் இருக்கும் நமது தந்தை நமக்கு அளிக்கட்டும், என்று இந்த இறைவணக்கப் பாடல் தொடங்குகிறது.

கத்தோலிக்க தேவாலயத்தில் அறிவுக் குளியல் செய்யப்பட்ட ஜெஸ்ஸிகா தனது 10 ஆவது வயதில் இருந்து கடவுளை நம்புவதை நிறுத்திக் கொண்டார். இந்த இறைவணக்கப்பாடல் தன்னை இழிவு படுத்துவதாக உள்ளது என்று இவர் கூறுகிறார்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து அந்தப் பாடல் ஒட்டப்பட்டிருந்த சுவர் துணியால் மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர்கள் பெருங் கூட்டமாக பள்ளி வளாகத்தில் திரண்டு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கோரினர். இது பற்றி பள்ளிக் குழு அடுத்த மாதத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

2010இல் இந்த இறைவணக்கப்பாடல் பற்றி ஒரு நண்பர் ஜெஸ்ஸிகாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். பெயர் வெளியிடாமல் ஒரு மாணவரின் பெற்றோர் இது பற்றி சிவில் சுதந்திர கூட்டமைப்பிடம் புகார் ஒன்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பாடலை நீக்கவேண்டுமா என்பது பற்றி பள்ளியின் பொதுக் குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைகள் அனைத்திலும் ஜெஸ்ஸிகா அதை நீக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இது பற்றி ஒரு பேஸ் புக்கையும் அவர் தொடங்கியிருந்தார். இதில் இப்போது நான்காயிரம் உறுப் பினர்கள் உள்ளனர்.

இந்தப் பாடல் மதத்துக்கு புத்துயிர் அளிப்பது போல் உள்ளது என்று அமெ ரிக்க மாவட்ட நீதிபதி ரொனால்ட் ஆர்.லாகுக்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் கூறியிருந்தார். அத்துடன் ஜெஸ்ஸிகாவுக்கு அச்சுறுத் தல்களும் விடப்பட்டுள்ளன; அவருக்குக் காவல்துறையினர் பாதுகாப்பும் அளித்துள் ளனர். எண்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் உள்ள மக்கள் உணர்வுப் பெருக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஜெஸ்ஸிகா எதையும் வெளிப்படையாகப் பேசும் ஒரு உண்மையான நாத்திகக் கொள்கையாளர் ஆவார். மதத்திலிருந்து விடுதலை அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட தேசிய அளவிலான நாத்திகக் குழு இவரைப் பாராட்டி பூங்கொத்துக்கள் அனுப்பியுள்ளது. இந்த அறக்கட்டளையின் இணைத்தலைவர் அன்னி லாரி கெய்லர் என்பவர் ஜெஸ்ஸிகாவுக்கு படிப்புதவித் தொகையாக 13 ஆயிரம் டாலர்கள் அளித்துள்ளார். அத்துடன், ஜெஸ்ஸிகா வின் செயலைக் கண்டு நானும் பெரும் வியப்படைந்தேன்; இந்த அளவுக்கு வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டு, ஒருவரை விலக்கி வைத்து களங்கப் படுத்தும் இத்தகைய ஒரு வழக்கை நீண்டதொரு காலத்திற்குப் பிறகு இப் போதுதான் நான் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அமெரிக்காவில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates