Google

பிணங்களை அடக்கம் செய்யும் கல்லூரி மாணவியர்! காணொளி இணைப்பு

Written on:January 24, 2012
Comments
Add One

பொதுவாக அரசு மருத்துமனை பிணவறையில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் உடல்களை மாநகராட்சி அதன் ஊழியர்களை கொண்டு அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் கோவையில் அவ்வாறு இல்லை. பின் எவ்வாறு என்கிறீர்களா?

கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள 9 அநாதை பிணங்களை (அதில் ஓன்று குழந்தை) நேற்று கோவைபுதூர் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு MSW பயிலும் மாணவியர் சுருதி,மாலினி, முதலாமாண்டு Bsc பயிலும் வினித், ஸ்ரீராம், மூன்றாமாண்டு Bsc பயிலும் நிர்மல், நந்தகுமார், இதயனாதன், மற்றும் முதலாமாண்டு BBM பயிலும் தீபக் ஆகிய இந்த 8 பேர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமான தோழர் அறக்கட்டளையுடன் இணைந்து அந்த அநாதை உடல்களை நல்லடக்கம் செய்தனர்.

கோவை அரசு பொது மருத்துவமனையில் 2004 ஆண்டு மார்ச் முதல் இந்த நாள்வரை 1530 ஆதரவற்ற உடல்களை தோழர் அறக்கட்டளை மனித நேயம் கொண்டோரின் உதவியுடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது.

அந்த வகையில் நேற்று மாலை 3 மணியளவில் தோழர் அறக்கட்டளை நிருவாகி சாந்தகுமாருடன் இணைத்து கிருஷ்ணா கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் அந்த 9 உடல்களை கோவை, பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஆத்துப்பாலம் மின் மயானம் கொண்டு சென்று எரியூட்டினர்.

உறவுகள் இருந்தது எப்படி மரியாதையுடன் உடலை அடக்கம் செய்வோமோ அதைப்போல அந்த உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்து எரியூட்டினர். இந்த மனித நேயமிக்க செயலை செய்த மாணவ மாணவியரை தமிழ்குடியரசு மனதார பாராட்டுகிறது, வாழ்த்துகிறது. இதனை படிக்கும் நீங்களும் பாராட்டி அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

18 Comments add one

  1. மனித நேயம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதற்கு மிக சிறந்த சான்று……. இந்த இளைஞர்களின் மனிதநேயமிக்க செயல். வாழ்த்துக்கள்….. தொடரட்டும் தங்கள் பணி.

  2. அய்யா தந்தை பெரியார் அவர்கள் இதுபோலதான் பெண்களும் சமுதாய பணிக்கு வரவேண்டு என்றுதான் எதிர்பார்த்தார். வாழ்த்துக்கள் மாலினி, சுருதி மற்றும் கிருஷ்ணா கல்லூரி மாணவர்களுக்கு…..

    • TamilKudiyarasu says:

      தங்கைகள் கூற்று முற்றிலும் உண்மை….. மிக்க நன்றி

  3. யாழினி துரை.வேலுமணி says:

    எனக்கு இது போலே வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே….. மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    • TamilKudiyarasu says:

      தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.

  4. light and shadow says:

    keep it up my dear students

    • TamilKudiyarasu says:

      தொடர்ந்து இது போல் எங்களை ஊக்குவிக்கவும்

  5. வெண்பா says:

    சூப்பர்… அக்கா

  6. Suresh C Nair says:

    வெரி குட் வொர்க்.. வினீத் வி ஆர் ப்ரௌட் ஒப் யு

  7. Malini says:

    proud of you Vinith and the rest of you . This is such a beautiful deed . god bless you all kids .

  8. poorni says:

    feeling very happy 2 see this….especially the girls for their daring nature and noble activity….special salute 2 the family 4 encouraging these people….may god bless u …..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates