Google

இந்து மதம் குறித்து ஜெயப்பிரகாஷ் நாராயண்!

Written on:January 2, 2012
Comments
Add One

சுபாயுதாஸ் குப்தா என்ற வங்காளி இளைஞர் எழுதியுள்ள இந்து சமூகப் பண்பும் மாறுதல் யுகத்தின் சவாலும் என்ற நூல்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் அதன் ஆசிரியர் பிராங்க் மோரேஸ் எழுதிய விமர்சனக் கட்டுரை பற்றியும் அதற்கு மத்திய அமைச்சர் கரன்சிங் கூறிய பதில் பற்றியும் ஜெயப்பிரகாஷ் நாராயண் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சுபாயுதாஸ் குப்தா, தமது நூலை சமர்ப்பணம் செய்யப் பொருத்தமானவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவன் நான். எனவே, அந்த நூல் பற்றி மோரேஸ் எழுதிய விமர்சனம் பற்றியும் அதற்கு டாக்டர் கரன்சிங் கூறிய பதில்பற்றியும் நான் எனது கருத்துகளைக்கூற அனுமதிக்க வேண்டுகிறேன்.

அவரவர் முறையின்படி இருவர் கூறியதும் முற்றிலும் சரியானதே என்று நான் கூறுவது அந்த இருவரில் யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது. இந்து மதத்தின் மனம் பிரம்மத்தைப் பற்றிய பரிசுத்தமான சிந்தனையில் அமைந் திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேக மும் இல்லை.

இந்துவின் அடையாளம் எது?

ஆனால், காலஞ்சென்ற ராஜதந்திரி வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர் அவர்கள் கூறியிருப்பது போல இந்து மதத்தின் இதயம் தர்ம சாஸ்திரங்களிலேயே வெளிப்படுகிறது.

சமூகப்பண்பும், தத்துவமும், ஒரே பொருள் அல்ல. ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர் ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்கலாம்; ஆனால் அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவதில்லை.

ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல; ஆனால் வழக்கங்கள், சடங்குகள், அனுஷ்டானங்கள், கற்களை, மரங்களை, மிருகங் களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது – ஆகிய வைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன. படுபயங் கரமான சிக்க லாகச் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத் தை பிணைத்து வைத்திருப்பது – அத்துடன் இந்து சமுதாயத் தின் தார்மீக, பொருளாதார முன்னேற் றத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பதும் இதுவே ஆகும்.

சங்கரமடங்களைப் பாருங்களேன்

மகாயான புத்தமதத்தின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் ஆழம்குறைந்தவர்கள் அல்லர் என்றாலும், புத்தருக்கும் உபநிஷதங் களுக்குப் பின்னால் இந்தியாவில் உருவாகிய தத்துவ ஞானிகளில் சங்கரர்தான் மிகவும் ஆழமானவர் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளுவோம்.

ஆனால் இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பரந்துபட்டுக் கிடக்கும் எண் ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின்றன? பச்சையான சுரண்டல் களங்களாகவும் அல்லவா இருக்கின்றன?

சங்கராச்சாரியின் அவமானச் செயல் இந்து மதத்தின் உச்சகட்ட உறை விடங் களான சங் கர பீடங்களையே எடுத்துக் கொள் ளுங்கள். இன்று அங்கே பதவி வகித் துக் கொண்டிருப் பவர்களில் குறைந் தபட்சம் ஒரு சங் கராச்சாரியாரா வது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன்மாதிரியாக விளங்கவில்லையா?

இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டு களுக்கு முன் அவமானத்துக்குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்கு பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

திரைமறையில் நாம் செய்வது என்ன?

நமது முன்னோர்களில் சிறப்பானவர்கள் சிலர் நிர்மாணித்த பிரம்மாண்டமான சிந்தனைக் கோட்டைகளின் பின்னால் மறைந்து கொள்ள இந்துக்களாகிய நாம் விரும்பு பவர்கள், அந்த திரையின் பின்னாலிருந்தபடியே உபநிஷத ரிஷிகளின் ஆன்மீக உள்ளாளியி லிருந்து லட்சோப லட்சம் மைல்களுக்கு அப்பாலுள்ள அனுஷ்டானங்களையும் சமய வடிவங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறவர்கள்.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தப் பழக்கம், நம் முதுகிலேயே நாம் தட்டி சபாஷ் போட்டுக் கொள்ளும் இந்தப் பழக்கம்தான் இன்றைய இந்து சமூகத்துக்கும், அறிவொளிக்கும், முன்னேற்றத்துக்கும் இடையில் நிற்கிறது.

புதிய புத்தன் ஒருவன் நமக்குத் தேவை

நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்: நமது சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்; நம் சமுதாயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும் அதனைச் சுத்தப்படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக்கொள்ளுவோம்.

- இவ்வாறு ஜெயப்பிரகாஷ் நாராயண் தமது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 20.9.1972)
தொகுப்பு: விடுதலை 15 ஏப்ரல் 2011

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates