Google

“ஜாதகம் பார்த்து வைத்தியம் பார்க்க வேண்டும்!” பெண் நீதிபதியின் புரட்சிகரமான கருத்து!

Written on:December 31, 2011
Comments
Add One

நோயாளிகளை ஜாதகத்தின் அடிப்படையில் வைத்தியம் பார்க்க வேண்டுமாம்; அதற்காக மருத்துவமனையில் பூசாரியை நியமிக்க வேண்டுமாம்.

ஜாதகம் சரியில்லாதவர்களுக்கு வைத்தியம் பார்ப்பது வீண் செலவாம் – ஒரு பெண் நீதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையரான ஒரு பெண் நீதிபதி மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்.

இந்த அமைப்பின் ஆணையராக உள்ள ஷீலா கன்னா என்ற பெண் நீதிபதி “உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை மய்யத்துக்குக் கொண்டு வரும் குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சிகிச்சை மய்யத்தில் ஒரு பூசாரியை நியமியுங்கள். இந்த மய்யத்திற்குக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு குழந்தையின் ஜாதகத்தையும் இந்தப் பூசாரி சரி பார்க்கவேண்டும். குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலித்த பிறகு, அக்குழந்தை பின்னாள்களில் நாட்டின் ஒரு நல்ல குடிமகனாக வருவான் என்று பூசாரி கருதினால், அக்குழந்தைக்கு மய்யத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

மற்றவர்களையெல்லாம், அவர்களின் விதிப்படி ஆகட்டும் என்று சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட வேண்டும். அரசு பணத்தை இது போல் விரயமாக செலவழிக்க நம்மால் இயலாது என்று அந்த அம்மையார் கூறினாராம்.

ஒரு தொண்டரிடம் பேசும்போது இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் எழுத்து மூலமாக எதையும் அளிக்க வில்லை. இவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது. புதுடில்லியின் குழந்தைகள் உரிமை மய்யத்தின் இணைஇயக்குநர் பாரதி அலி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிலும் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி, குழந்தைகளுக்கு ஜாதகம் பார்த்துசிகிச்சை அளிக்கவேண்டும் என்றும், ஜாதகம் சரியில்லாவிட்டால் சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என்றும் மிகவும் மனிதத்தன்மையற்ற முறையில் பேசியுள்ளார்.

நன்றி:தமிழ்சுடர்.காம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates