Google

நிர்வாண சாமியாரா? பயித்திகாரானா?

Written on:December 28, 2011
Comments
Add One

மன்னார்குடி மூவா நல்லூரைச் சேர்ந்தவர் சேகர் என்ற கட்டடத் தொழிலாளி. இவர் திடீரென்று நிர்வாணமாக ஓடி, ஒரு கோவிலுக்குள் போய் குந்திக் கொண்டார். அவர் யாருக்கோ சாபமிட்டார் – மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி நீதிமன்ற ஆணைப் படி சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாராம். புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால், பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவர் சொன்ன சாபம் பலித்துவிட்டதால், அந்தச் சாமியார் பக்கம் கவனம் திரும்பிவிட்டதாம். (பயித்தியக்காரன் கிழித்ததும் கோவணத்துக்கு ஆச்சு என்பது பழமொழி அல்லவா!) கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு முக்கியப் பிரமுகர்கள் சென்று (முதலமைச்சர் அலுவலகத்தின் அதி காரம்வரை பயன்படுத் தப்பட்டு) மீண்டும் அந்தப் பைத்தியக்கார நிர்வாண சாமியாரை அவர் முன்பு தங்கி இருந்த சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலுக்குக் கொண்டு வந்துவிட்டனராம். (வடலூர் வள்ளலாருக்கு இப்படி ஒரு அவலமா?)

அடடே, எப்படிப்பட்ட சாதனை! எப்படிப்பட்ட அறிவுத் தீட்சண்யம்! உடைகளையெல்லாம் (கோவணம் உள்பட) கழற்றி எறிந்துவிட்டு அம்மணக்குண்டியாக, நிர்வாணமாக ரோட்டில் திரிந்தால் ராஜமரியாதை கிடைக்கும் என்று அறிவார்களாக!

மானத்தைக் காப்பாற்றிட உடை உடுத்துபவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உருப்படாத பேர்வழிகள் என்பதை உணர்வார்களாக!

ஒன்று செய்யலாம், நாட்டில் நடக்கப் போவதை யெல்லாம் முன்கூட்டியே அறிந்து சொல்லும் ஒருவர்தான் நாட்டுக்கு மிக மிக அவசியம் தேவைதான்.

சுனாமி வருமா? புயல் வீசுமா? மழை பொய்க் குமா? நிலநடுக்கம் ஏற் படுமா? பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமா? என் பதையெல்லாம் அறியக் கூடியவர்தான் அவசர அவசரமாக இப்பொழுது தேவை! தேவை!! பேராற் றல் படைத்த (?) இத்தகைய அம்மணக் குண்டி சாமியார்களை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ அல்லது மாநிலங்களின் முதலமைச்சர்களாகவோ ஆக்கினால் என்ன?

பிரதமருக்கு ஆலோசனை கூறும் அறிவுசார் மன்றம் (Knowledge Commission) இதுபற்றி யோசிக்குமாக!

நன்றி:மயிலாடன்/விடுதலை

2 Comments add one

  1. நானும் படிச்சேன் தினமலர் நாளிதழ் செய்திய ..எனக்குத் தோன்றிய கருத்தும் இதேதான்!
    இனி அந்த கர்மம் பிடிச்சவன் பின்னால ஒரு கூட்டம் அலைஞ்சு , ‘சன்னலைத் தொற, சந்தோசம் வரும்’ அப்படிங்குற ரேஞ்சுக்கு அந்தாள உசுப்பி விடப்போரானுங்க பாருங்க!

    • TamilKudiyarasu says:

      மிக சரியாக சொன்னீர்கள்… நன்றி தங்களின் கருத்துரைக்கு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates