கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் பிரிட்டன் முன்னாள் தூதர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அவர்கள் ஆஜ ராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன் றம் அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதா கோபி, இது குறித்து இந்தியாவுக் கான பிரிட்டன் துணை தூதரக அதிகாரி இயான் ரீகெஸ் மற்றும் ஹோவர்ட் பார்கின்சன் ஆகிய இரு வரும் வீடியோ கான்ஃ பரன்ஸிங் முறையில் விளக் கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தங்கள் நாட்டைச் சேர்ந்த தூதர்களிடம் விசாரணை நடத்துவ தற்கு கடந்த மாதம் பிரிட் டன் அரசு அனுமதி அளித் தது. இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி இத்த கைய உத்தரவை பிறப் பித்துள்ளார்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன் முறையில் பாதிக்கப்பட்ட இம்ரான் தாவூத் என்ப வர் தாக்கல் செய்த மனு வில், பிரிட்டன் தூதுவர் கள் தான் தாக்கப்பட் டதை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர்களை விசா ரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சபர்காந்தா பகுதியில் உள்ள பிரசாந்திஜ் எனு மிடத்தில் தானும் தன் னுடன் சிலரும் தாக்கப் பட்டது குறித்து விசா ரிக்க வேண்டும் என்று தாவூத் குறிப்பிட்டிருந் தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக் குழு வும் (எஸ்அய்டி) இவர் களை விசாரிக்கலாம் என குறிப்பிட்டதாக தாவூத் வழக்குரைஞர் ஏ.எம். மாலிக் தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டன் பிரஜை கள் சயீத் தாவூத், முக மது அஸ்வத் நலபாய், ஷகீல் தாவூத் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த டிரைவர் யூசுப் சுலை மான் ஆகியோர் உயிரு டன் எரித்துக் கொல்லப் பட்டனர். தேசிய நெடுஞ் சாலை எண்.8இல் பிப் ரவரி 28ஆம் தேதி, 2002 ஆம் ஆண்டு இச்சம்ப வம் நிகழ்ந்தது. இதில் ஷகீலின் சடலம் கிடைக்க வேயில்லை. 7 ஆண்டு களுக்குப் பிறகு அவர் இறந்ததாக அறிவிக்கப் பட்டது. இந்த சம்ப வத்தில் இம்ரான் மிகக் கடுமையாகக் காயம டைந்தார். ரோந்து காவல் துறையினர் அவரைக் காப்பாற்றி பின்னர் எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் மற்றும் நான்கு பேர் நீதிமன்றத்தில் சாட் சியமளித்தனர்.
இது தொடர்பாக இறந்து போனவர்களது சாம்பல் மற்றும் எலும் புகளை பெற்றுக் கொண்ட பிரிட்டன் தூதர் ரீக் ஸிடம் விசாரிக்கவேண் டும் என்று இம்ரான் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் பார்கின்ஸன் அளித்த அறிக்கையும் பதிவு செய்யப்பட வேண் டும் என்றும் அவர் குறிப் பிட்டிருந்தார்.
கடந்த மாதம் இது தொடர்பாக நீதிமன்றத் தில் பிரிட்டன் பிரஜை பஷீர் சுஃபியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு இரண்டு பேரை தேடியது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் விவரித் தார். அப்போது பெயர் குறிப்பிடாதவரிடமிருந்து தொலைநகல் வந்ததாக வும் அதில் குற்றவாளி யின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்ததாகவும் தெரி வித்தார். இந்த சம்பவத் தில் தொடர்புடைய 10 பேரின் பெயரை அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர் பாக இதுவரை 73 சாட் சிகள் விசாரிக்கப்பட் டனர். இதில் 3 பேர் 2009ஆம் ஆண்டு பிறழ் சாட்சிகளாக மாறினர். இதில் உயிரிழந்தோரின் உறவினர்களும் இழப் பீடு கோரி சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Add One