Google

யார் இந்த ஸ்டீபன் வில்லியம் ஹாகிங்! காணொளி இணைப்பு

Written on:January 1, 2012
Comments
Add One

ஹாகிங்கைத் தாக்கியுள்ள நரம்புத்தசைச் செயலிழப்பு நோய் 1974 முதல் அவரைச் செயலிழந்தவராகவே ஆக்கிவிட்டது. இந்த நோய்தான் தாக்கியிருக்கிறது என்பது கண்டு-பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குமேல் யாரும் வாழ்ந்தது கிடையாது. அப்படி வாழ்பவர்கள் அரிது. இதுவரை உள்ள பதிவுகளின்படி ஒருவர் 32 ஆண்டுகள் நோயுடன் வாழ்ந்துள்ளார். ஆனால், ஹாகிங் 46 ஆண்டு-களுக்கு மேல் வாழ்ந்துவருகிறார். அப்படிப்பட்ட அரிதினும் அரிதான அறிவியல் அறிஞராகத் திகழும் ஹாகிங் ஒரு பகுத்தறிவாளர் என்பது கூடுதல் பெருமை.

அவரது 21 ஆம் வயதில்தான் நோய்த் தாக்குதல் வெளிப்படையாகத் தெரியவந்தது. அவரைச் சோதித்த மருத்துவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குமேல் உயிர் வாழமாட்டார் எனக் கூறினார்கள். ஆனால் ஹாகிங் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 2009 முதல் மொத்தமாகச் செயலிழந்தவராகி-விட்டார். அறிவியல் கருவியின் உதவியுடன் அவர் பேசுவது வேகமாகப் பேசுவதுபோல் கேட்கும். ஆனால், அது எவ்வளவு கடினமானது என்பதை அவரைப் பார்க்கும் போது உணரலாம். அமெரிக்க ஆங்கிலத்தில் பேசும் பழைய கருவியையே அவர் பயன்படுத்துகிறார். அந்தக் குரல் அவருக்கும் பழகிப்போய்விட்டது. பிடித்து விட்டது. பழக்கத்தை மாற்றுவது எளிதல்லவே!

எழுத்தாற்றல்

மூன்று ஆண்டுகள்தான் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் அவரை மணந்து கொண்ட ஜேன்ஹாகிங் அம்மையாரைக் கேட்டார்கள், எப்படி இந்த முடிவை எடுத்தீர்கள் என்று! அணுவின் ஆயுள்வளர்ந்து உலகின் ஆயுள் நெருங்கிக் கொண்டிருப்பது போலத்தோன்றிய காலம் அது; எல்லோருக்குமே குறைந்த ஆயுள்தான் எனக் கருதப்பட்ட காலம் எனபதால் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார், துணிச்சல்தான். அவருடைய மகள் லூசி ஹாகிங் அவருடைய நூல்களை வெளியிடு-வதில் உதவியாக உள்ளார். ஹாகிங்கும் அவரின் மகளும் சேர்ந்து சிறார்க்கான சிறந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளனர். அண்மையில் பரபரப்பாகப் பேசப்படுகிற, ஹாரிபாட்டர் போன்ற நூலாகும் இது. ஆனால், அறிவுக்குப் பொருந்தாத மாயாஜால, மந்திரதந்திரச் செயல்கள் இல்லாத நூல். GEORGE’S SECRET KEY TO THE UNIVERSE எனும் நூலின் தலைப்பே படிப்போரின் மனதில் அறிவியலை விதைப்பதாக அமைந்துள்ளது. நிறைய அறிவியல் புனைகதைகளை எழுதி-யுள்ளார். காலத்தின் சுருக்க வரலாறு, பிரபஞ்சம்  மிகச்சுருக்கமாக, கருத்துரைகளும் சிறிய பிரபஞ்சமும், போன்றவை மிக அதிகமாக விற்பனை ஆகும் சில நூல்களாகும். அரசியல் நிகழ்வுகள்பற்றிப் பேசுவது கிடையாது என்றாலும் பிரிட்டனின் தொழிற் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்து வானொலியில் பேசியுள்ளார்.

நடிப்பாற்றல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடித்துள்ளார், வேற்று கிரகங்கள் எனும் நிகழ்ச்சியில் டிஸ்கவரி சேனலில் நடித்துள்ளார். பிரிட்டனின் புகழ்பெற்ற சேனல் 4 தொலைக்காட்சிக்காவும் நடித்துள்ளார். அவரது தொலைக்காட்சி நாடகங்கள் ஏராளம். அவரது நாடகங்கள் நிறைய குறுந்தகடு (டிவிடி) களாக வெளிவந்துள்ளன. இவை அனைத்திலும் அவர், தமது அறிவியல் கருத்துகளையே வலியுறுத்தி வந்துள்ளார். மத மவுடீகக் கருத்துகள்பற்றிக் குறிப்பிடுவதே இல்லை.

வேற்றுக்கிரக உயிர்கள்

பிரபஞ்சத்தில், பூமி தவிர, ஏனைய கோள்-களிலும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கருத்துத் தெரிவிக்கிறார். கோள்களில் மட்டுமல்லாது, வேறு இடங்-களிலும், விண்மீன்கள் போன்றவற்றிலும்கூட, உயிர்கள் இருக்கலாம் எனவும் கருதுகிறார். அத்தகைய உயிர்கள் மிகவும் அறிவாற்றல் உள்ளனவாகவும் பூமி வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் தரக் கூடியவையாகவும் இருக்கலாம் எனவும் கூறுகிறார். அவற்றுடன் தொடர்பு ஏற்பட்டால் அது மனித குலத்திற்கு அழிவாக அமைந்து-விடலாம் எனவும் அச்சப்படுகிறார். அமெரிக்கா-வில் கொலம்பஸ் கால் வைத்தது எப்படி அங்கே வாழ்ந்த பூர்வ குடிகளுக்குத் தீமையாக விளைந்ததோ, அதேபோன்ற நிலை பூமிக்கு ஏற்படும் என்று கணிக்கிறார். அந்நிய கிரகத்தாரோடு தொடர்பு வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கிப் போவதே உத்தமம் என்கிறார். இந்தக் கருத்தியலின் அடிப்படையில் நிறையத் திரைப்படங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

கால்களால் நடந்தார்

அறிவியலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார் ஹாகிங். தமது 65 ஆம் பிறந்த நாளான 8.1.2007இல் ஈர்ப்புவிசையற்ற விண்பயணக்கலத்தில் (ZERO GRAVITY FLIGHT) பயணித்துப் பார்க்கும் விருப்பத்தினை வெளி-யிட்டார். வர்ஜின் காலக்டிக் எனும் விமான நிறுவனம் இத்தகைய பயணத்தை ஏற்பாடு செய்தது. இதற்கான செலவு சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர். அதாவது 45 லட்சம் ரூபாய் ஆகும். இவரின் பயணத்திற்கான முழுச்செல-வையும் தாம் ஏற்றுக் கொள்வதாக பெரும் பணக்காரரான ரிச்சர்டு பிரான்கன் என்பார் அறிவித்தார். வாமிட் காமட் (VOMIT COMET) எனும் விண்கலத்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது எடையற்ற தன்மையை அவர் அனுபவித்தார். எட்டுமுறை எடையற்ற தன்மையை உணர்ந்தார். இப்பயணம் 26.4.2007இல் நடந்தது. இந்தப் பயணத்தின்-போது, சக்கர நாற்காலியின் உதவி இல்லாமல் சுதந்திரமாக ஹாகிங் நடமாடினார். கடந்த 40 ஆண்டுகளாக அவரால் செய்ய இயலாமல் இருந்த நிலை இப்பயணத்தின்போது நீங்கிப் போனது. இந்தப் பயணத்தை ஏன் மேற்-கொண்டீர்கள் எனப்பலரும் கேட்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணமாக உலகில் வாழ்வதில் பல அபாயங்கள் உள்ளன; எதிர்பாராத அழிவுகள், அணு ஆயுதச்சண்டைகளால் ஏற்படக் கூடிய நிலை, உருவாக்கப்படும் உயிர்க் கொல்லி வைரஸ்களால் ஏற்படக் கூடிய நிலை போன்றவை உள்ளன. வான-வெளிக்குப் போகாதவரையில் மனித உயிர்-களுக்கு எதிர்காலம் இருக்கிறது எனக் கருத-வில்லை. ஆகவே, வானவெளிக்குப் போக, மனிதர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் இப்பயணத்தை மேற்கொண்டேன் என்று ஹாகிங் இப்பயணம்பற்றிக் குறிப்பிட்டார். சொல்வதைச் செய்து காட்டும் பண்பு, பிறருக்குக் கூறும் அறிவுரைப்படி தாமே வாழ்ந்து காட்டும் பண்பு அறிவியலாளரான ஹாகிங்குக்கு இருந்தது. காரணம் அவர் பகுத்தறிவாளர்!

கடவுளுக்கு வேலையில்லை

உலகையும் பிரபஞ்சத்தையும் படைப்பதற்குக் கடவுள் என்ற ஒன்று தேவையில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தவர் ஹாகிங் கடவுள் இந்த உலகைப் படைப்பதற்கு, நமக்குத் தெரியாத காரணங்கள்தான் அடிப்படையா? அல்லது பிரபஞ்சம் உருவானதற்கு சில பல அறிவியல் விதிகள் (LAW OF SCIENCE) தான் காரணமா? இந்த இரண்டு கேள்விகளில் நான் இரண்டாவதையே தேர்ந்தெடுக்கிறேன் என்று தெளிவாகத் தெரிவித்தவர் ஹாகிங். இதற்கான காரணத்தையும் அவர் கூறிவிட்டார்: எந்தப் பொருளும் இல்லாமலேயே பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறது என்றிடும் ஈர்ப்புவிசை-கள்பற்றிய விதிகள் உள்ளன என்று அவர் கூறிய விஞ்ஞான உண்மைகளைத்தான் டெலி-கிராப் ஏட்டின் நிருபர் கிரகாம் பர்மெல்லோ பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை என்று ஹாகிங் கூறுகிறார் என்று உலகுக்கு அறிவித்தார்.

மதம் தேவையில்லை

அவருடைய மனைவியின் கூற்றுப்படி ஹாகிங் ஒரு நாத்திகர். அவருக்கு மத நம்பிக்கை கிடையாது. பிரபஞ்சம் அறிவியல் விதிகளின்படி மட்டுமே இயங்கிவருகிறது. கடவுள் இத்தகைய விதிகளைப் படைத்தது எனக் கூறினாலும் அந்தக் கடவுளே முயன்றாலும் இந்த விதிகளை முறிக்க முடியாது என்று தம் கொள்கையில் மிகவும் உறுதியானவர்.

மதத்திற்கும் அறிவியலுக்கும் பெரும் மாறுபாடு உள்ளது; மதம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவியலோ காரணகாரிய ஆய்வு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இறுதியாக அறிவியலே வெல்லும். ஏனென்றால் அது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று ஹாகிங் பட்டுக்கத்தரித்தாற் போன்று தம் கருத்தை வெளியிட்டு இருக்கிறார். எவர்தாம் மறுக்க முடியும்?

பெற்ற சிறப்புகள்

இப்பேர்ப்பட்ட நாத்திகருக்குப் பிட்டிஷ் அரசு 1974 முதலே பல்வேறு விருதுகளைத் தந்து சிறப்பித்துள்ளது. 1974 இல FRS, 1982 இல் OBE, 1989 இல் COH, அதே ஆண்டில் அஸ்டூரியா விருது, 2006இல் கோப்ளி விருது, 2009 இல் விடுதலைக்கான அதிபர் விருது ஆகியவை குறிப்பிடத்தக்கன. இவற்றில் விடுதலைக்கான அதிபர் விருது (PRESIDENTIAL MEDAL OF FREEDOM) என்பது அமெரிக்க அரசு அளிக்கும் மிக உயரிய விருது (நம் ஊர் பாரத ரத்னா போல) ஆகும்.
மதநம்பிக்கையற்ற நாத்திகருக்கு கடவுள், மத நம்பிக்கையில் ஊறிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசு உயர்ந்த விருது அளிக்கிறது என்றால், பகுத்தறிவுக்குப் பெருமைதானே! கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் அவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிகாவின் கேப்டவுன் நகரில் அவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கான் சால்வடார், எல் கால்வடார் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மய்யங்களுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெருங்கூட்டம் ஒன்று அவர் பெயரால் கூட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான நினைவுச் சின்னங்கள் அவர் வாழும் காலத்திலேயே நிறுவப்பட்டு அவர் பெருமையை, அவர்அறிவை,அவர்ஆற்றலைப்பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

நன்றி:உண்மை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Previous post:

Next post:

WP Like Button Plugin by Free WordPress Templates